Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலி தாண்டிய ராமர்! சித்திரை திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சுவது ஏன்? சித்திரை திருவிழாவில் தண்ணீர் ...
முதல் பக்கம் » துளிகள்
அழகர் வைகையில் இறங்குவது ஏன்?
எழுத்தின் அளவு:
அழகர் வைகையில் இறங்குவது ஏன்?

பதிவு செய்த நாள்

16 ஏப்
2016
03:04

வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்.அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது. வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், (பிறவி) கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார். அதற்கேற்றாற்போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏ!  சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட, என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.

ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க வேண்டும்! மச்சமாகப் போ (மீனாக மாறு) என சாபம் பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு வருவார்.  காரணம் என்ன! எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....அல்லது சாப விமோசனம். ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில் வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்! பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்.. ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம். பார்த்தாலே இப்படி என்றால்....திருவடி பட்டால் என்னாகும்! அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார். ஆஹா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே! என்றார் மண்டூகர். அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய், என்றார் பெருமாள். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார். நமக்கும் அதே நிலை தான்! அழகர் ஆற்றிலே இறங்குகிறார். பார்க்க முடியாதவர்களுக்காக ஏப்.23ல் வைகைக்குள் இருக்கும் தேனுõர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அவரது திருவடியைத் தரிசித்தாலே போதும். பூலோகத்திலேயே சொர்க்கத்தைக் காணலாம். ஆம்... அவரிடம் மனதார பிரார்த்தித்தால் போதும். மழை வேண்டுமென்றால் மழை பெய்யும். பணம் வேண்டுமென்றால் அள்ளித்தருவார். எல்லாம் நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் இருக்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar