ஒரு தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்தோத்திரம் மற்றும் பாடல்களைப் படிக்கும் போது, எங்கு அமர்ந்து படிக்கிறோமோ, அதைப் பொறுத்து பலன் வித்தியாசமாகும் என்கிறது சாஸ்திரம். வீட்டில் ஜபித்தால் ஒரு மடங்கும், ஆறு, குளம், கிணறு என தண்ணீருள்ள இடத்தில் ஜபித்தால் இரு மடங்கும், மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து சொன்னால் நுõறு மடங்கும், யாகம், ஹோமத்தில் அக்னி வளர்த்து ஜபித்தால் ஆயிரம் மடங்கும், புண்ணிய ஸ்தலங்கள், கோவில் கருவறை முன்பு ஜபித்தால் கோடி மடங்கும் பலன் உண்டாகும்.