கோயில்களில் நிவேதனம் செய்யும்போது, துணி போட்டு மறைத்துக் கொள்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2016 05:04
நாம் சாப்பிட்ட உணவை தெய்வத்துக்கு நிவேதனம் செய்யக்கூடாது. நாம் எதை சாப்பிடுகிறோமோ அதைத்தான் தெய்வத்துக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
யத் அன்னாத் புருஷோமவதி தத் அன்னாத் தஸ்ய தேவதா
அதாவது, நாம் அரிசி சாதம் சாப்பிட்டால் தெய்வத்துக்கு அரிசி சாதம் நிவேதனம் செய்வது, கோதுமை சாப்பிட்டால் கோதுமை நிவேதனம் பண்ணுவது என்பது ஐதீகம். பகவானுக்கு நிவேதனம் செய்த சேக்ஷத்தை நாம் சாப்பிடணும். அதற்குத்தான் பிரசாதம் என்று பெயர். நிவேதனம் செய்வதை ஏன் துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஒரு மனிதன் தம் கண்களால் பகவானுக்குப் பண்ணக்கூடிய நிவேதனத்தைப் பார்த்தாலோ அல்லது மூக்கினால் நுகர்ந்தாலோ சாப்பிட்டதாக ஆகி விடும் என்று சாஸ்திரம் சொல்கிறது. பூஜையைச் செய்பவர் அதைத் தயார் செய்கிற சமையல்காரர் அதைப் பார்க்கிறார்களே, நுகர்கிறார்களே என்று கேட்டால் அவருக்கு அது தோஷம் இல்லை. ஏனென்றால், பூஜை செய்பவருக்கு நிவேதனம் செய்ய வேண்டும் என்பது விதிக்கப்பட்டிருக்கிறது. தயார் செய்கிறவனுக்கு அவர் செய்த சர்க்கரைப் பொங்கல் வாசனை மூக்கைத் துளைக்கிறது என்று வேறு யாராவது சொல்லிவிட்டால் அதை சாப்பிட்ட மாதிரி ஆகிவிடும். நாம் சாப்பிட்டதை பகவானுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. கண்களால் பார்த்ததை நிவேதனம் செய்யக்கூடாது. ஆகவேதான், பிரசாதத்தை துணியால் மறைத்துக் கொண்டு நிவேதனம் செய்வது வழக்கம்.