பதிவு செய்த நாள்
26
ஏப்
2016
11:04
ஊத்துக்கோட்டை : சங்கடஹர சதுர்த்தி விழாவை ஒட்டி, விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வகணபதி கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னிதி, ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னிதி, செட்டித் தெருவில் உள்ள விநாயகர் கோவில், பேருந்து நிலையம் அருகே உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.