பதிவு செய்த நாள்
02
செப்
2011
10:09
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு முக்குறுணி விநாயகருக்கு, 27 கிலோ எடையில், "மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. முக்குறுணி விநாயகர் நேற்று வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அருகம்புல் மாலை அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 27 கிலோ எடையில், 18 படி பச்சரிசியில், "மெகா கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு, படைக்கப்பட்டது. 108 விநாயகர் போற்றி பாடலை பக்தர்கள் பாடினர். செந்தில் பட்டர் உட்பட பல பட்டர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது. சதுர்த்தியை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், முக்குறுணி விநாயகர் சிலைக்கு, இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் 15 போலீசாரும், நான்கு கோபுரங்களிலும் எஸ்.ஐ., தலைமையில், ஆயுதம் தாங்கிய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.