பதிவு செய்த நாள்
02
மே
2016
11:05
ப.வேலூர்: ப.வேலூரில், சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. ப.வேலூர் பேட்டையில் உள்ள சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடப்பது வழக்கம். இந்த விழாவில் ப.வேலூர், பரமத்தி, இடையாறு, பொய்யேரி, பொத்தனூர், பாண்டமங்கலம், கபிலர்மலை, ஜேடர்பாளையம் மற்றும் நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக தீ மிதித்தும், பூ வாரி போட்டும் நேர்த்தி கடனை செலுத்துவர். புது மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 29ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, வடிசோறு, அக்கினி சட்டி எடுத்தலும், 3ம் தேதி பூ மிதித்தலும், 4ம் தேதி அழகு போடுதல், அக்கினி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 5ம் தேதி கம்பம் காவிரி ஆற்றுக்கு செல்லுதல், ஆற்றில் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும், 6ம் தேதி மஞ்சள் நீராட்டல் நிகழ்ச்சியும் நடக்கிறது.