ஈரோடு: ராமநவமியை முன்னிட்டு, பொதுமக்கள் சார்பில், சீதா கல்யாணம் நடந்தது. ராம நவமியை ஒட்டி, ஈரோடு கருங்கல்பாளையம் ரங்கபவனம் ராமர் கோவிலில், சீதா கல்யாணம் நேற்று நடந்தது. ஹோம பூஜைகளை தொடர்ந்து அன்னதானம், திருமண தாம்பூலம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ராமர், சீதாவுக்கு வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க ஆரவாரத்துக்கு இடையே திருமணம் நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் நடத்தப்பட்டது. திருமணத்தை தாமோதர ஆச்சார் நடத்தி வைத்தார்.