சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் தலம் சிதம்பரம். இங்கு அருள்பாலிக்கும் திருமூலநாதர், உமையம்மை மற்றும் நடராஜரை மனதில் நினைத்து இந்த பாடலைத் தினமும் மாலையில் படித்தால், வீட்டில் ஆனந்தம் நிலைத்திருக்கும். திருநாவுக்கரசர் பாடியது இது.
அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைக்கடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.