விடியற்காலை 4-00 மணி முதல் 5-00 மணி வரை பிரம்ம முகூர்த்தம். அப்பொழுது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் பழகி விட்டால் பிறகு பழக்கமாகி விடும். இப்படிச் செய்வது ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலன்களைக் கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருகிறார்கள். அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிபட்டால் அவர்களை கவுரவித்து வரவேற்பதாகும். அவர்கள் சந்தோஷப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.