செவ்வாய் தோஷ ஜாதகக்காரர்களுக்கு, ஜாதகக் காரரையே திருமணம் செய்விக்க வேண்டும் என்கிறார்களே.... ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2011 01:09
செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ ஜாதகமே வேண்டும் என்றில்லை; அதற்கு நிகரான தோஷம் கொண்டுள்ள ஜாதகத்தையும் எடுத்துக்கொள்ளலாம். தோஷ ஸாம்யம் என்றால், அதற்கு நிகரான சமமான தோஷம் என்று பொருள். ஒரே தோஷத்தை நிகர், சமம் என்று சொல்வதில்லை. மாறுபட்ட இரண்டு தோஷங்களையே ஒப்பிட்டுச் சொல்ல முடியும். சந்திரனைப் போன்ற முகம் என வர்ணிப்போம். முகத்தைப் போன்ற முகம் என்று சொல்வோமா?! செவ்வாய் தோஷம் இருந்தால், அதற்கு நிகரான தோஷம் கொண்ட ஜாதகத்தையும் சேர்க்கலாம். செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ ஜாதகத்தையே பார்க்கும் எண்ணம் வலுப்பெற்றதால், பல திருமணங்கள் காலம் தாழ்த்தப்பட்டு, செயற்கையான சிக்கலை ஏற்படுத்தி, அவர்களது விலைமதிக்க முடியாத வாழ்நாள் வீணாகக் காரணமாகிவிடுகிறது. 7-ல் இருந்தால் தோஷம் என்பதை மறந்து, 7-ஐப் பார்ப்பதாலும் தோஷம் என்று சேர்த்து, செவ்வாய் தோஷத்தை விரிவுபடுத்தி மக்களை அலைக்கழிக்கும் சூழல் உருவாகிவிட்டது. திருத்த இயலாத அளவுக்கு நம்பிக்கை வேரூன்றிவிட்டது. சான்றில்லாத நம்பிக்கை சரிதானா என உணரும் காலம் வரும் !