பதிவு செய்த நாள்
07
மே
2016
02:05
செல்வத்தின் அதிபதி குபேர லட்சுமி. ‘அட்சயதிரிதியை’ நாளில் குபேர லட்சுமி அல்லது அதிர்ஷ்ட லட்சுமி படத்தை பூஜையறையில் வைக்க வேண்டும். இவ்வாண்டு திங்கள் கிழமையில் அட்சய திரிதியை வருவதால், காலை 9.00 –10.30 மணிக்குள் பூஜையை முடிக்க திட்டமிட வேண்டும். செந்தாமரை, மல்லிகை, பிச்சி மாலை அணிவிக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, சந்தனம், பழவகை, அட்சதை, சாம்பிராணி, நவதானியம், அவல், பால், தேன், தயிர்சாதம், நாணயங்கள் ஆகியவற்றை படைக்க வேண்டும். ‘ஓம் குபேராய நமஹ’ ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ ஆகிய மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பாலை குழந்தைகளுக்கும், தேனை பெண்களுக்கும், தயிர்சாதம் மற்றும் நாணயங்களை ஏழைகளுக்கும் தானமாக வழங்கவேண்டும். தானியத்தை பறவைகளுக்கு துõவ வேண்டும்.