அமுதம் வேண்டி தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது முதலில் ஆலகால விஷம் தோன்றியது. இதனால் எல்லோரும் மயக்கமுற்றனர். அந்த விஷத்தின் கொடுமையில் இருந்து தேவர்களையும் இவ்வுலகையும் காப்பாற்ற, அதை உருண்டையாக்கி உண்டார் சிவன். இதனால் மயக்கமுற்ற நந்திதேவருக்கு காப்பு அரிசியைக் கொடுத்து அவர் மற்றும் தேவர்களின் மயக்கம் நீக்கியது பிரதோஷ வேளை என்னும் மாலைப்பொழுது என்பது பொதுவான விஷயம். தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷம் வருவது எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால், இந்த நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடந்தது என்பது தெரியாத விஷயம். இதனால் தான் சனி பிரதோஷத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.