கோவிலுக்கு கோவில் ஒவ்வொரு தல விருட்சம் வைத்திருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2016 03:05
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் உள்ள கோவில்கள்தான் ஷேத்திரம்’ எனப்படும். மூர்த்தி என்றால் மூலஸ்தான இறைவன். தலம் என்றால் தல விருட்சம். தீர்த்தம் என்றால் திருக்குளம். இதில் தல விருட்சமும் மூலஸ்தானத்தைப்போல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அக்கோவில் தோன்றுவதற்கு முன்பு இறைவன் அந்த மரத்தடியில் தான் இருந்திருப்பார். இறைவனுக்கு நிழல் தந்த பெருமையைக் கொண்ட அந்த மரம் அருட்சக்தியை தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு கோவிலின் வரலாறுப்படி இது வெவ்வேறு மரங்களாக இருக்கும்.