கெங்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு சாக்கைவார்த்தல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2016 06:05
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் செவலை ரோட்டில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் சித்திரைமாத சாக்கைவார்த்த விழா நடந்தது. திருக்கோவிலுார் செவலை ரோட்டில் உள்ள பழமையான கெங்கையம்மன் கோவிலில் சித்திரை விழா நடந்தது. கடந்த 6ம் தேதி கொடியேற்றி காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முதல் நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷகம் அலங்காரம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சிவபெருமானுக்கு அம்மன் பூஜை செய்யும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. காலை8:00 மணிக்கு தென்பெண்ணையில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக சென்று கரகம் கோவிலை அடைந்தது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் பகல் 12:00 மணிக்கு கூழ் எடுத்து வந்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கூழ் பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. தொழில் அதிபர் டி.கே.டி.பாபு தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.