பதிவு செய்த நாள்
11
மே
2016
11:05
மீஞ்சூர்: மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவிலில், புதியதாக தயார் செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம், நாளை நடைபெறுகிறது.மீஞ்சூர், வரதராஜ பெருமாள் கோவில் தேர் சேதமடைந்ததால், 45 அடி உயரத்தில், புதிய தேருக்கான திருப்பணிகள், கடந்த, 2014ம் ஆண்டு துவக்கப்பட்டது. நிதி பற்றாக்குறையால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, கடந்த, பிப்ரவரி மாதம், தேர் திருப்பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்மாதம், 25ம் தேதி நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது, புதிய தேர் பவனி வர வேண்டும் என, திட்டமிடப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல், தேர் திருப்பணி குழுவினர் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வந்தனர். தற்போது, தேர் திருப்பணிகள், முடிந்து உள்ள அதன் வெள்ளோட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை காலை, 9:00 மணிக்கு நிலையில் இருந்து, புறப்படும் தேர், மாட வீதிகள் வழியாக உலா வர உள்ளது.