சிவபூஜைச் சமயத்தில், சிவபெருமானுடைய தெற்கு நோக்கிய முகத்தை வணங்குவதற்குப் பயன்படும் மந்திரம் அகோரமந்திரம் எனப்படும். இந்த மந்திரம் மஹாநாராயண உபநிஷதத்தில் இடம் பெற்றுள்ளது. அது வருமாறு:
பொருள்: எல்லாமாகியவரே! கோரமில்லாத உங்களுடைய சாந்த (சாத்விக) வடிவங்களுக்கும், கோர (ராஜஸ) வடிவங்களுக்கும், மிகவும் கடுமையான (தாமஸ) வடிவங்களுக்கும், பிரளய காலத்தில் துன்புறுத்தும் உங்களுடைய எல்லா ருத்ர வடிவங்களுக்கும், எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் நமஸ்காரம் இருக்கட்டும்.