Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்? நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் தரும் தானங்கள்! நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் ...
முதல் பக்கம் » துளிகள்
நடராஜருக்கும் தியாகராஜருக்கும் உள்ள ஒற்றுமை!
எழுத்தின் அளவு:
நடராஜருக்கும் தியாகராஜருக்கும் உள்ள ஒற்றுமை!

பதிவு செய்த நாள்

13 மே
2016
02:05

சைவ சமயப் பேருலகின் இரண்டு ராஜாக்களான நடராஜருக்கும் தியாகராஜருக்கும் உள்ள ஒற்றுமைகள்.

ஆதிரையான்: இருவரும் ஆதிரை நாளில் விழா காண்பவர்கள். திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரை விழாவின் சிறப்பை அப்பர் அடிகள் பதிகமாகவே பாடியுள்ளார். தில்லை நடராஜர் திருவாதிரைக்கு முன்பு, தேர் ஏறி வலம் வந்து அலங்கார - அபிஷேகம் கண்டு சபைக்கு எழுந்தருள்கிறார்.

தேர் ஊர்ந்த செல்வன்: இந்த இருவருமே தேரில் மட்டும் வலம் வருபவர்கள். அதன் பிறகு இருவருக்கும் பெரிய அளவில் சாந்தி அபிஷேகம் நடைபெறுகிறது.

கூத்து உகந்தான்: நடராஜரின் நடனம்: ஆனந்தத் தாண்டவம். தியாகராஜரின் நடனம்: அஜபா நடனம்.

நடராஜப் பெருமான் ஆறு அபிஷேகங்கள்: இந்த இருவருக்கும் ஆண்டுக்கு ஆறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

ரகசியம்: தில்லைக் கூத்தரின் வலப்புறம் தனியாக ஒரு சுவரில் ஆகாச யந்திரம் அமைந்துள்ளது. இது சிதம்பர ரகசியம் என்று போற்றப்படுகிறது. திருவாரூரில், பெருமானின் திருமேனியே ரகசியமாகப் போற்றப்படுகிறது. இது சோமகுல ரகசியம் எனப்படுகிறது.

பூங்கோயிலும் பொற்கோயிலும்:தியாகராஜருக்கு உரியது பூங்கோயில் என்றால், தில்லைக் கூத்தனுக்கு உரியது பொற்கோயில்.

தியாகராஜப் பெருமான் திருச்சாலகம் (ஜன்னல்): தில்லையில் 96 கண்களைக் கொண்ட வெள்ளியால் போர்த்தப் பெற்ற ஜன்னல் உள்ளது. திருவாரூரில், திருச்சாலகம் எனும் தென்றல் தவழும் ஜன்னல் உள்ளது.

செங்கழுநீர் தாமம்: இருவருமே செங்கழுநீர் மாலை களை விரும்பி அணிவதால் செங்கழுநீர் தாமத்தார் என்று சிறப்பிக்கப்படுகின்றனர்.

ஆயிரங்கால் மண்டபம்: இரு இடங்களிலும் ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ளன.

மண்ணாகி விண்ணாகி: தில்லைப் பெருமான் ஆகாய வடிவானவர். திருவாரூர்ப் பெருமான் பூமி வடிவினர். இந்த இருவருமே மண்ணாகி, விண்ணாகி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

திருமூலட்டானம்: தில்லையிலும் திருவாரூரிலும் மூல லிங்கத்துக்கு மூலட்டானேஸ்வரர் என்றே பெயர்.

பாத தரிசனம்: இரு இடங்களிலுமே பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய இருவரும் பாத தரிசனம் கண்டுள்ளனர். தில்லையிலே பெருமானின் அதிர வீசி ஆடத் தூக்கிய இடப் பாத தரிசனம் கண்டு மகிழ்ந்து, மார்கழித் திருவாதிரை நாளில் பேறு பெற்றனர். பின்னர் இருவரும் திருவாரூர் வந்து, இறைவனின் இருந்தாடும்-கூத்து கண்டு பங்குனி உத்திர நாளில் வலப் பாத தரிசனம் பெற்றனர்.

இரு பெருந்தேவியர்: திருவாரூரில் கமலாம்பிகை, நீலோற்பலாம்பிகை என இரு பெருந்தேவியர். தில்லையில் சிவகாமி, மூலட்டானநாயகி என இரு தேவியர்.

அடியெடுத்துக் கொடுத்தவர்கள்: இரு ராஜாக்களுமே அடியவர்கள் பாட அடியெடுத்துக் கொடுத்தவர்கள். திருவாரூர் பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமி களுக்கு, தில்லை வாழ் அந்தணர் என்று அடி யெடுத்துக் கொடுத்தார். பெரிய புராணம் பாட, உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்தார் தில்லைப் பெருமான். திருவாரூர் பெருமான், தில்லை என்ற முதலடியைக் கொடுத்து சிதம்பரத்தை நினைவு படுத்துகிறார். தில்லைக் கூத்தனோ, உலகம் என்று அடியெடுத்து மண் தத்துவமான திருவாரூரை நினைவுபடுத்துகிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர் மாஸ்ய விரதம். ஒவ்வொரு ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவில்களும், தனித்தன்மை கொண்டது. வழிபாடுகளும் மாறுபட்டவை. இத்தகைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar