வானுலகில் மந்தாகினி என்ற பெயரில் உள்ள கங்கையை பூலோக புனிதத்திற்காக வரவழைக்க பகீரதன் என்னும் அரசன் தவம் செய்தான். சிவபெருமான் தமது சடையில் அந்த நதியை வாங்கி, இமயமலையின் கங்கோத்ரி என்னும்இடத்தில் ஊற்றாக உண்டாக்கி பிறகு ஜீவநதியாக காசி முதலான புண்ணியத்தலங்களில் பாயுமாறு அருளினார். பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என பல பெண் தெய்வங்களின் வடிவானவள் கங்காதேவி. தினமும் காசிக்கும், ஹரித்வாருக்கும் செல்லும் பக்தர்களுக்கு புனிதமான கங்கா மாதாவின் அருள் கிடைக்க மங்கள ஆரத்தி செய்யப்படுகிறது. இதனால் பாவங்கள் நீங்கும்.