பதிவு செய்த நாள்
28
மே
2016
10:05
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அடுத்த சின்னக்கள்ளிப்பட்டி கணேசபுரத்தில், திருநாராயண ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு உலக மக்கள் நலனுக்காக, அஷ்டமுக கண்ட பேருண்ட ஜ்வாலா நரசிம்ம மகா யாகம் நடந்தது. காலையில் துவங்கி மதியம், 2:00 மணி வரை நடந்த யாகத்தில், கண்டபேருண்ட நரசிம்ம ரூபம், ஆதிநரசிம்ம ரூபம் (சிம்மம்), வியாக்ர நரசிம்ம ரூபம் (புலி), ஹயக்ரீவ நரசிம்ம ரூபம் (குதிரை), வராஹ நரசிம்ம ரூபம் (பன்றி), ஹனுமத் நரசிம்ம ரூபம் (ஹனுமான்), கருட நரசிம்ம ரூபம் (கருடன்), பல்லுாக நரசிம்ம ரூபம் (கரடி) ஆகிய ஹோமங்கள் நடந்தன. நிலம், நீர், ஆகாயம், காற்று, அக்னி ஆகிய பஞ்ச பூதங்களுக்காக யாகம் செய்யப்பட்டது. வாராகி மணிகண்ட சுவாமி நிறைவு பூஜை செய்தார். யாகத்தில் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.