பதிவு செய்த நாள்
04
ஜூன்
2016
11:06
மடத்துக்குளம்: மடத்துக்குளம் மைவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது.
மடத்துக்குளம் அருகேயுள்ள மைவாடி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, மே 24ம்தேதி இரவு, 1:00 மணிக்கு திருக்கம்பம் நடுதல், பூவோடு வைத்தல், 25ம் தேதி அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், 31ம் தேதி இரவு, 7:00 மணிக்கு சக்திகும்பம் எடுத்தல், தீர்த்த அபிேஷகம் நடந்தன. ஜூன் 1ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம், மாவிளக்கு, பூவோடு, சிறப்பு ஆராதனை, 2ம் தேதி மதியம், 3:00 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. இதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மஞ்சள் நீராடுதல், மகா அபிஷேகத்துடன் விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.