ராமகிருஷ்ண மடம் ஆன்லைன் ஸ்டோரில் 50சதவீதம் தள்ளுபடியுடன் புத்தக விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2016 11:06
ராமகிருஷ்ண மடம் சார்பில் ஏராளமான ஆன்மிகம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் பிரிண்ட் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது.
இத்தகைய புத்தகங்கள் மடங்களில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது இந்த புத்தங்கள் அனைத்தும் ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி விற்பனை ஜூன் 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் என ராமகிருஷ்ண மடத்தின் மேனேஜர் சுவாமி விமூர்த்தானந்தர் தெரிவித்துள்ளார். வாசகர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி ராமகிருஷ்ண மடத்தில் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.