பதிவு செய்த நாள்
06
ஜூன்
2016
12:06
மதுரை: விளாச்சேரி பட்டாபிஷேக இராமர் கோயிலில் 08.6.2016 முதல் 16.06.2016 வரை விளாச்சேரி அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீபட்டாபிஷேக இராமர் கோவிலில் நவாக மகோற்சவம் (சீதா கல்யாண வைபவம், ஸ்ரீ இராம பட்டாபிஷேக மகோற்சவம்) நடைபெற உள்ளது.
இந்த ராமாயண நவாகத்தை முறைப்படி செய்தால் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி பிரசன்னமாவார். குபேர சம்பத்து, புத்திரபாக்கியம் உண்டாகும். எல்லாத் துன்பங்களும் விலகும். குடும்ப சௌஜன்யம் ஏற்படும். தனதான்ய அபிவிருத்தி உண்டாகும். அன்யோன்யம். சௌமனஸ்யம், ஐக்கியமர்த்தியம், மோட்சம் கிடைக்கும். தர்மத்திற்கு உட்பட்டு எல்லா பிரார்த்தனைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வல்லது என்பது ஐதீகம்.
நிகழ்ச்சி நிரல்:
08.06.2016 முதல் 16.06.2016 வரை காலை 6.00 மணி அளவில் ஸ்ரீமத் வால்மீகி மூல இராமாயண பாராயணம் நடைபெற உள்ளது.
8.6.2016 புதன்கிழமை
காலை: 5:15 மணி- சுப்ரபாதம்
காலை: 5:30 மணி- கணபதி ஹோமம், விஷேஷ அபிஷேக ஆராதனை
மாலை: 6:30 மணி- ஸ்ரீமத் இராமாயண உபந்யாசம்
தலைப்பு: ஸ்ரீராமர் ஜனனம்
நிகழ்துபவர்: ஸ்ரீ சங்கரன் சர்மா அவர்கள் வேதகுருகுலம், விளாச்சேரி
இரவு: 8:00- டோலோற்சவம்
9.6.2016 வியாழன்
காலை: 7:30 மணி முதல்- சீதா கல்யாணம் 9.00 மணிக்குள்
மாலை: 6:30 மணி- ஸ்ரீமத் இராமாயண உபந்யாசம்
தலைப்பு: யக்ஞ சம்ரக்ஷ்ணம்
இரவு: 8:00 மணி- டோலோற்சவம்
10.6.2016 வெள்ளி
காலை: 8.00 மணி- சுதர்சன ஹோமம் (சத்ருக்கள் நீங்க)
மாலை: 6.30 மணி- ஸ்ரீமத் இராமாயண உபந்யாசம்
தலைப்பு: சீதா கல்யாணம்
இரவு: 8.00 மணி- டோலோற்சவம்
11.06.2016 சனி
காலை 8:00 மணி- ஸ்ரீசரஸ்வதி மகா மந்த்ர ஹோமம் (கல்வி நன்கு வர)
மாலை 6:30 மணி- ஸ்ரீமத் இராமாயண உபந்யாசம்
தலைப்பு: கௌசல்யா மங்களா சாசனம்
இரவு: 8:00 மணி& டோலாற்சவம்
12.6.2016 ஞாயிறு
காலை: 8:00 மணி- ஸ்ரீதுர்கா ஹோமம் (குடும்ப ஒற்றுமை, திருமணத் தடை நீங்க)
மாலை: 6:30 மணி- ஸ்ரீமத் இராமாயண உபந்யாசம்
தலைப்பு: வனவாசம்
இரவு: 8:00 மணி- டோலோற்சவம்
13.6.2016 திங்கள்
காலை 8:00 மணி- அஷ்டதிரவிய ஸ்ரீசுக்த ஹோமம் (அஷ்ட ஐஸ்வர்யம் பெற)
மாலை 6:30 மணி- ஸ்ரீமத் இராமாயண உபந்யாசம்
தலைப்பு: சுக்ரீவ சக்யம்
இரவு: 8:00 மணி- டோலோற்சவம்
14.6.2016 செவ்வாய்
காலை: 8:00 மணி- நவக்கிரஹ ஹோமம் (நவகிரஹங்களின் அனுகூலம் பெற)
மாலை: 6:30 மணி- ஸ்ரீமத் இராமாயண உபந்யாசம்
தலைப்பு: சுந்தர காண்டம்
இரவு: 8:00 மணி- டோலோற்சவம்
15.6.2016 புதன்
காலை: 8:00 மணி- ஸ்ரீபுருஷ சுக்த ஹோமம் (சர்வபாப பிராயர்ச்சித்தம்)
மாலை: 6:30 மணி- ஸ்ரீமத் இராமாயண உபந்யாசம்
தலைப்பு: ஸ்ரீஇராமர் ஜெயம்
இரவு: 8:00 மணி- டோலோற்சவம்
16.6.2016 வியாழன்
காலை 7:30-9.00 மணி- ஸ்ரீஇராமர் பட்டாபிஷேகம் சிறப்பு அன்னதானம்
மாலை: 6:30 மணி- ஸ்ரீமத் இராமாயண உபந்யாசம்
தலைப்பு: ஸ்ரீஇராமர் பட்டாபிஷேகம்
இரவு: 8:00 மணி- டோலோற்சவம்
இந்த நவாகத்தை ச்ரத்தையுடன் கேட்கும் புண்யாத்மாக்களுக்கு தீர்க்காயுஸை அளிக்கவல்லதும், ஆரோக்கியத்தையளிக்கவல்லதும், புகழையளிக்கவல்லதும், நல்லவர்களின் நட்பை அளிக்க வல்லதும், நற்புத்தி புகட்டவல்லதும், செவிக்கினியதும் தேஜஸை அளிப்பதுமானது என்று ஸ்ரீமூல வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. பக்தகோடிகள் அனைவரும் வரும் 9 நாட்களும் தவறாது கலந்துகொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் அருளுக்குப் பாத்திரமாகும்படி விழாக்குழுவினர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
தொடர்புக்கு: 97888 54854
பஸ் ரூட்: 9ஏ, அண்ணா நிலையத்திலிருந்து விளாச்சேரி
பஸ் ரூட்: 9ஏ, பெரியார் நிலையத்திலிருந்து விளாச்சேரி/ மூலக்கரையிலிருந்து ஷேர் ஆட்டோ.