Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் - பார்வதி திருமணம் நடந்த ... சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள்! சிவபெருமான் நிகழ்த்திய 64 ...
முதல் பக்கம் » துளிகள்
இயற்கையோடு இயைந்த கோயில்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இயற்கையோடு இயைந்த கோயில்கள்!

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2016
02:06

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் அருள் புரிவான் என்பர். சித்தர்கள் அரிய மூலிகைகளைக் கண்டறிந்தும், முனிவர்கள் தவம் செய்ததும் மலைமீது தானே எனவேதான், மன்னர்கள் மலை மீதும், குன்றின் மீதும், நதிக்கரைகளிலும், கடற்கரையிலும் கோயில்களை அமைத்து வழிபாடு செய்தனர். மலைக்கோயிலுக்குச் செல்வதால் மனம் அமைதி பெறுகிறது. திருவண்ணாமலை கிரிவலம், சதுரகிரி யாத்திரை போன்றவை புனிதமானவை. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என சரண கோஷம் சொல்லி சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பனை தரிசித்து பெரும் பயன் அடைகின்றனர். ஏழு மலை மீது கோயில் கொண்ட வேங்கடாசலபதி கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக, நாடி வரும் பக்தர்களுக்கு நல்லருள் புரிகிறார். திருக்கயிலாய யாத்திரை சென்று கயிலைநாதனை தரிசித்து பிறவிப் புண்ணியம் அடையும் பக்தர்கள் எண்ணற்றோர். பழநி மலையில் போகர் நவபாஷாண மூலிகையால் பாலதண்டாயுதபாணி சிலையை அமைத்துள்ளதால், முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பஞ்சாமிர்தம் நோய் தீர்க்கும் மாமருந்தாகத் திகழ்கிறது.

மாமல்லபுரம், திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்யாகுமரி, பூம்புகார் போன்ற கடற்கரைக் கோயில்கள் சிறப்பு மிக்கவை. காவிரி நதிக்கரையில் அமைந்த ஸ்ரீரங்கம், கங்கை கரையில் அமைந்த காசி போன்ற பல திருத்தலங்கள் நதிக்கரையில் அமைந்தவை. குற்றால நீர்வீழ்ச்சி பொங்கி வழியும் இடத்தில் உள்ள குற்றாலநாதர் கோயில் சிறப்பு மிக்கது.

அறிவியல் விளக்கம்: கரடு முரடான மலைப் பாதையில் ஏறுவதால் பாதங்களில் உள்ள அக்யூபிரஷர் புள்ளிகள் தூண்டப்பெற்று உடல் நலம் சீராகிறது. நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தினால் மன அமைதி, உற்சாகம் கிடைக்கிறது. மலையில் உள்ள பலவித மூலிகைகளினால் சுத்தமான பிராண வாயு கிடைக்கிறது. இதனால் மூளை, இதயம், நுரையீரல் போன்றவற்றின் திறன் மேம்படுகிறது. நகர வாழ்க்கையில் மாசுப்பட்ட காற்றை சுவாசிக்கும் நமக்கு இயற்கை அழகுடன் இயைந்த மலைக்கோயில், கடற்கரை கோயில், நதிக்கரைக் கோயில்களை தரிசிப்பதால் இறையருளுடன் புண்ணியமும், உடல் நலமும் கிடைக்கிறது.

கடற்கரையில் சுவாசிக்கும் அயோடின் கலந்த காற்றால் தைராய்டு சுரப்பி நன்கு இயங்கும். முன்னோர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டே மலைக்கோயில், கடற்கரைக் கோயில், நதிதீரக் கோயில்களை அமைத்தனர். முன்னோர்களின் அனுபவங்கள் நம் வாழ்வின் அணுகூலங்கள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar