பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
11:06
சபரிமலை : சபரிமலை ஐயப்பன் சிலை பிரதிஷ்டை தினத்திற்காக 13ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இது தவிர, ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஆனி மாத பிறப்பன்று 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்.வரும், 14-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து, பக்தர்கள், 18-ம் படியேற அனுமதிக்கப்படுவர். அன்று, வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு, 10:00 மணிக்கு நடைஅடைக்கப்படும். மறுநாள், 15-ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவங்கி வைப்பார். 19-ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.