பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
02:06
கடமையுணர்வுடன் பாடுபடும் மீன ராசி அன்பர்களே! (எதிர்பாராத நன்மை)
ராகு, சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவர். புதன் ஜூன் 19 முதல் ஜூலை 6 வரையில் நன்மை அளிப்பார். முயற்சியில் தடை வந்தாலும் ராகுவால் முறியடிப்பீர்கள். குரு பகவான் ராசிக்கு 6 ல் இருப்பதால் மனத் தளர்ச்சியும், உடலில் பாதிப்பும் உருவாகலாம். ஆனாலும் அவரது 9ம் பார்வை மூலம் எதிர்பாராத நன்மை கிடைக்கும். கையில் பணப்புழக்கம் கூடும். குடும்பத்தில் மதிப்பு உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஜூலை 8 க்கு பிறகு பெரியோர் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். தம்பதியிடையே அன்பு நீடிக்கும்.
தொழில், வியாபாரத்தில் பெண்களால் தொல்லை உருவாகலாம். ஜூன் 19 வரை அரசுவகையில் விழிப்புடன் இருப்பது நல்லது. அதன் பிறகு பிரச்னை அனைத்தும் தீரும். லாபம் படிப்படியாக உயரும். ஜூலை 8,9 ல் தொழில் ரீதியான திடீர் பயணம், பணவரவை எதிர்பார்க்கலாம்.
பணியாளர்கள் மாத முற்பகுதியில் கவனமுடன் இருக்கவும். ஜூன் 20 க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். ஜூலை 6 க்கு பிறகு இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சக கலைஞர் மத்தியில் செல்வாக்கு கூடும்.
அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள் ஓரளவு முன்னேற்றம் காண்பர். ஜூன் 19 க்கு பிறகு கல்வி வளர்ச்சி ஏற்படும்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.
பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர்.
நல்ல நாள்: ஜூன் 20,21,22,23,24,27,28, ஜூலை 1,2,8,9,10,11,12
கவன நாள்: ஜூன் 15,16,17,
ஜூலை 13,14 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,7
நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: பெருமாள், ராமர் கோவிலுக்கு சென்றால் நன்மை சிறக்கும். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். ஏழைகளுக்கு தானம் கொடுங்கள்.