பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
04:07
உழைப்பால் உயர்ந்திடும் மேஷ ராசி அன்பர்களே! (சுபநிகழ்ச்சி நடக்கும்)
சுக்கிரன் ஆக 1ல் சிம்ம ராசிக்கு மாறினாலும் நன்மை தருவார். புதன் ஜூலை 24 வரை
கடகத்தில் இருந்து பொருளாதார வளம் தருவார். குரு ஜூலை 31 வரை நன்மை தருவார். குருவால் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். அதன் பின் குரு ஆக 1ல் கன்னி ராசிக்கு செல்வது நல்லதல்ல. இருந்தாலும் அவரது 9-ம் பார்வை நன்மை தரும். எந்த இடையூறையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். ஜூலை 24க்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஜூலை 27,28ம் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். பெண்களால் சிரமத்தை
சந்திக்கலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். கேதுவால் எதிரிகளின் சதியை முறியடிப்பீர்கள். ஜூலை 24க்கு பிறகு வெளியூர் பயணம் ஏற்படலாம். ஆக. 7,8ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது கிடைக்க வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காணலாம். ஜூலை 24க்கு பிறகு புதன் சாதகமற்று இருப்பதால் சிரத்தையுடன் படிப்பது அவசியம்.
விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பெண்கள் சகோதரிகளின் ஆதரவைப் பெறுவர். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
நல்லநாள்: ஜூலை 21,22,23,27,28,31 ஆகஸ்டு 1,7,8,9,10,11,16
கவன நாள்: ஜூலை 16,17 ஆக. 12,13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு தழை போடுங்கள். வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.