கொடைக்கானல்: சுற்றுலா நகரின் டோபி கானல் பகுதியில் அமைந்துள்ள பெரிய காளியம்மனை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வணங்கி வரம் பெறுகின்றனர். கடந்த 67 ஆண்டுகளாக பங்குனி மாதத்தில் திருவிழா நடந்து வருகிறது. சுயம்புவாக உருவான பெரிய காளியம்மன் வேண்டு÷ வார்க்கு வேண்டிய வரம் தருவாராம். கொடைக்கானல் சுற்றுவட்டார பக்தர்கள் இங்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கூடுகின்றனர். இவ்விரு நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டுவோர், தொழிலில் முன்னேற்றம் விரும்புவோர் இந்த அம்மனை வேண்டினால் அதன் ‘சக்தி’ புரியும் என்கின்றனர் பக்தர்கள். இதனால் பல நகரங்களிலி ருந்து வரும் சுற்றுலாபயணிகளும் இங்கு வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத வளர்பிறையில் டோபி கானல் பெரிய காளியம்மன் கோயிலில் 15 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. நகரின் பிரதான பகுதியில் அரசு விளையாட்டு பள்ளி மைதானம் அருகே அமைந்துள்ள கோயிலில் காலை 6 முதல் 9 மணி வரை பெரிய காளியம்மனை தரிசிக்கலாம். மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு வழக்கம் போல் அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. தொடர்புக்கு அலைபேசி 98421 10899ல் தொடர்பு கொள்ளலாம்.