நரிக்குடி: நரிக்குடி அருகே புளிச்சிகுளத்தில் ஸ்ரீ உக்கிர வீரமாகாளி அம்மன், ஸ்ரீ சக்தி கணபதி ஆலய மஹா கும்பாபிஷேகம் ஏப்ரல் மாதம் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு 48வது நாள் மண்டல அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நரிக்குடி மற்றும் சுற்றுப்பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ மாகாளியம்மன் டிரஸ்ட் நிர்வாகி சிங்கப்புலி செய்தார்.