திருச்சுழி: திருச்சுழியில் திருமேனிநாதசாமி கோயிலில், விவேகானந்த கேந்திரம் சார்பாக உலக நன்மைக்காவும், மக்களிடத்தில் சகிப்பு தன்மை, ஒற்றுமையாக வாழ வேண்டி 1008 விளக்கு பூஜை நடந்தது. 20 கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். ராமலிங்கா மில்ஸ் சேர்மன் தினகரன் துவக்கி வைத்தார். கேந்திர பொது செயலாளர் பானுதாஸ் முன்னிலை வகித்தார். விளக்கு பூஜையின் நினைவாக நாகலிங்க மரக்கன்றை சமூக ஆர்வலர் திருப்பதிராஜ் தொழில் அதிபர் தினகரனிடம் வழங்க, கோயில் வளாகத்தில் நடப்பட்டது.