அரூர்: அரூர் அடுத்த புதுப்பட்டியில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் திருவிழா, கடந்த சனிக்கிழமை துவங்கியது. திங்கட்கிழமை மகா மாரியம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று வேடியப்பனுக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். இதையடுத்து, இன்று காளியம்மனுக்கு மாவிளக்கும், தொடர்ந்து சக்தி அழைத்தல், கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மகா மாரியம்மன், விநாயகருக்கு வாணவேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.