Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டிரான்ஸ்பர் தரும் மிளகாய்! நினைத்ததை நிறைவேற்றும் விபூதி விநாயகர்! நினைத்ததை நிறைவேற்றும் விபூதி ...
முதல் பக்கம் » துளிகள்
நேரம் தவறாதவன்.. வாக்கு தவறாதவர்!
எழுத்தின் அளவு:
நேரம் தவறாதவன்.. வாக்கு தவறாதவர்!

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
02:06

ராமபிரான் 11000 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார். அன்றைய தினம் அவருக்கு கடைசிநாள். ஸ்ரீமன் நாராயணனே, ராமனாக பூமியில் அவதாரம் செய்திருக்கிறார். எமனுக்கு தன் கடமையைச் செய்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டு விட்டது. நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். நம்மிடம் அவன் அனுமதி கேட்பதில்லை. நினைத்த நேரத்தில் பஸ்சிலோ, ரயிலிலோ, வெள்ளத்திலோ, நெருப்பிலோ, முதுமையாகவோ வந்து நம்மை அள்ளிக்கொண்டு போய் விடுவான்.  அயோத்தியிலோ பகவான் அல்லவா மனிதனாகப் பிறந்திருக்கிறார். அதனால், தன் சுயரூபத்தில் வராமல் ஒரு முனிவரின் வடிவில் வந்தான். காவலன் மூலம் தகவல் சொல்லியனுப்பி, ராமன் அருகில் சென்றான். ராமா! என்னைத் தெரிகிறதல்லவா! நான் எமதர்மன் வந்திருக்கிறேன். இன்றோடு பொழுது முடிந்தது. நீங்கள் கிளம்ப வேண்டும், என்றான்.  இதனால் தான் எமனை சத்யசந்தன் என்பார்கள். அவனுக்கு அயோத்தி ராமனும் ஒன்று தான்! கடைக்கோடி ராக்கப்பனும் ஒன்று தான். குறித்த தேதியில் வந்து விடுவான். நேரம் தவறாமைக்கு எமனை உதாரணமாகக் கொள்ள வேண்டும். ராமனும் அப்படியே! அவன் நாராயணனாகிய தெய்வம். எமனே! இன்னும் நாலைந்து நாள் பொறுத்திரு! அயோத்தியில் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லவில்லை. இத்தனை நாள் தான் இங்கு இருக்க வேண்டும் என்று வாக்கு தவறாமல் கிளம்பி விட்டார். வால்மீகி இந்தக் காட்சியை அற்புதமாக ராமாயணத்தில் வர்ணித்து இருக்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar