பதிவு செய்த நாள்
04
ஜூலை
2016
11:07
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஆனி தெப்ப உற்சவம், இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு அமாவாசை தினங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். ஆனி மாதத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப உற்சவம், இன்று மாலை துவங்குகிறது. இதற்காக, ஹிருத்தாபநாசினி குளத்தில், தெப்ப உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இன்று முதல், வரும் 6ம் தேதி வரை, மூன்று நாட்களும், மாலை 6:30 மணிக்கு, தெப்ப உற்சவம் நடக்கிறது. இதில், உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.