ஈரோடு: ஈரோடு ரயில்வே காலனி மாயவர் கோவிலில் ஆராதனை விழா நடந்தது. ஈரோடு ரயில்வே காலனி மேற்கு பகுதியில் மாயவர், பாமா ருக்மணி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆனி மாதத்தையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. மாயவர், பாமா ருக்மணி, பாலமரக்கன்னி முதலான பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.