Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரே செங்கல்லில் இவ்வளவு புண்ணியமா! ஒரே பீடத்தில் இரண்டு லிங்கங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெற்றி வந்தால் பணிவு அவசியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
05:07

*பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்கள்
உள்ளவர்கள் தோற்றாலும் கவலைப்படமாட்டார்கள். இந்த குணங்களால் தம்
செயல்களில் வெல்பவர்கள் பணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
*பிறர் தவறே செய்தாலும் அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்.
அவர்களது குற்றங்களை மன்னித்து மறந்து விடுங்கள்.
*உழைப்பே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு. உழைப்பால் கிடைத்த பணத்தை
அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். குறைந்தபட்சம் வருமானத்தில் பத்தில் ஒரு
பங்கையாவது பிறருக்காக செலவழியுங்கள்.
*டன் கணக்கில் தத்துவம் கேட்பதை விட பயனுள்ள பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் தியானம், ÷ யாகப்பயிற்சியில் த்டுபடுவதை அன்றாடக் கடமையாக கொள்ள வேண்டும்.
*உணவு மிதமான அளவாகவும், எளிதில் ஜீரணமாகும் விதத்திலும் இருக்க வேண்டும். சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவாகவும், குறிப்பாக  காரம், புளிப்பு போன்ற உணர்ச்சியைத் துõண்டும் உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்.
*தினமும் இரண்டு மணி நேரமும், வாரம் ஒருமுறை நான்கு அல்லது எட்டுமணி நேரமும் மவுனமாக இருப்பது நன்மை அளிக்கும். நீண்ட நடைப யிற்சி அல்லது
சுறுசுறுப்பான விளையாட்டுப் பயிற்சியில் அன்றாடம் ஈடுபடுங்கள்.
*மாதத்தில் இருமுறை ஏகாதசி போன்ற நாட்களில் விரதம் மேற்கொள்ளுங்கள்.
அந்நாளில் பால், பழ உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.
*உண்மை மட்டும் பேசுங்கள். தேவையின்றி பேசாதிருக்கவும் பழகுங்கள். இனிமையும், கருணையும் பேச்சில் நிறைந்திருக்க வேண்டும்.
*எண்ணம், சொல், செயலால் யாருக்கும் துன்பம் தராதீர்கள். பேச்சிலும், செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள். திறந்த மனதுடன்  அனைவரிடமும் பழகுங்கள்.
*நியாயமான வழியில் பணம் சம்பாதியுங்கள். தவறான வழியில் கிடைக்கும் பணம், பொருள், மற்றவர்களின் ஆதரவு ஆகியவற்றை மறுக்கத் த யங்காதீர்கள். பெருந்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*கடவுள் நம்பிக்கைஅற்றவர்கள், கீழான குணம் கொண்டவர்கள், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவர்கள் ஆகியோரின் நட்பினைப்  புறக்கணித்து விடுங்கள்.
*பிறருக்கு நல்லதை எண்ணுவதும், செய்வதும் மட்டுமே ஆன்மிகம். மனதில் சிறிதும் ஆணவம் கொள்ள கூடாது. சுயநலம் மறந்து பிறருக்கு இய ன்ற அளவில் உதவி செய்ய விரும்புங்கள்.
*எப்போதும் கடவுள் சிந்தனையில் மனதைச் செலுத்துங்கள். குறைந்த பட்சம் காலையில் கண் விழிக்கும் போதும், இரவு துõங்கச் செல்லும் போதும்  கடவுளை தியானிப்பது அவசியம்.
*உங்களது தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
*பிறருடைய கருத்தில் நியாயம் இருந்தால் ஏற்றுக் கொள்ள தயங்காதீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
*எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை இரண்டும் வாழ்வின் லட்சியமாக இருக்கட்டும் தேவைகளுக்குப் பிறரது உதவியை எதிர்பார்த்துக் காத்திரு க்காமல் சுய காலில் எப்போதும் நிற்கப் பழகுங்கள்.  (மகான் சிவானந்தர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar