சாத்துார்: சாத்துார் முத்தால் நாயக்கர்பட்டியில் ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில், ஸ்ரீதுர்க்கையம்மன், ஸ்ரீகாலபைரவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த ஜூலை 8 காலை 6.00 மணிக்கு வேதபாராயணத்துடன் யாகசாலைபூஜை துவங்கியது. இதை தொடர்ந்து மகாகணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம்,நவகிரக ஹோமம் நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜைக்கு பின், புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. இதன் பின் சந்தனகாப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த சுவாமிக்கு தீபாராதனையுடன் பூஜைகள் செய்யப்பட்டது. பகல் 12.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.