பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
01:07
கூடுவாஞ்சேரி: மாடம்பாக்கத்தில், வலம்புரி வினாயகர் கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. கூடுவாஞ்சேரியை அடுத்த, மாடம்பாக்கம், வள்ளலார் நகரில், வலம்புரி விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, 8ம் தேதி, கணபதி ஹோமத்துடன், பூஜைகள் துவங்கின. யாகசால பூஜைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை, 8:30 மணிக்கு, மூலவர் வலம்புரி வினாயகர் சன்னிதி, பார்வதி பரமேஸ்வரன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை மற்றும் மகாவிஷ்ணு தெய்வங்களின் சன்னிதிகளுக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், இந்த பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பக்தி பெருக்குடன் பங்கேற்றனர்.