புதுச்சத்திரம்: ஆலப்பாக்கம் புனிதவள்ளி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 7ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. 9ம் தேதி முதல்கால ய õகசாலை பூஜை துவங்கியது. 10ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனையும், மாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று 11ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும். ய õத்ராதானம் 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:50 மணிக்கு புனிதவள்ளி சமேத புஜண்டேஸ்வர சுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், 10:20 மணிக்கு மகா அபிஷேகமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.