Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஞ்சலகங்களில் புனித கங்கை நீர் ... வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்! வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
10:07

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மேலும் 3 இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு கடந்த ஜூலை 1ல் வந்த கடிதத்தில் ஆண்டாள்கோயிலில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஒரு டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஆண்டாள் கோயிலின் முக்கிய பகுதிகள், மாடவீதிகள், ராஜகோபுரம், தங்ககோபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் எஸ்.பி.,(பொறுப்பு) விஜயேந்திரபிதரி கோயிலில் ஆய்வு செய்தார். கோயிலின் கிழக்கு, வடக்கு, தெற்கு வாசல்கள் என 3 இடங்களில் மெட்டல் டிடெக்டர் பொருத்த உத்தரவிட்டார். ஏற்கனவே இரு இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் உள்ள நிலையில், நேற்று மேலும் மூன்று இடங்களில் மெட்டல் டிடெக்டர் பொருத்தும்பணி துவங்கியது. முக்கிய நபர்களின் வாகனங்கள் மட்டுமே ஆண்டாள் ஆடிப்பூரகொட்டகை வரை அனுமதிக்கப்படுகிறது. மற்ற வாகனங்கள் மாடவீதிகள், ரதவீதிகளில் நிறுத்தப்படுகின்றன.

13 நாளில் 3 மிரட்டல் :
இந்த ஆண்டு ஜூன் 29 , ஜூலை 1 தேதிகளில் இரு மிரட்டல் கடிதங்கள், விருதுநகர் போலீசாருக்கு வந்துள்ளன. இதில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்துார், மற்றொன்று விருதுநகர் சூலக்கரையில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருந்தபோதிலும் கோயிலின் பாதுகாப்பை அதிகபடுத்தி, மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு 3வது முறையாக ஒரு மிரட்டல் கடிதம் போலீஸ்துறைக்கு வந்துள்ளது. அவர்கள் விசாரணையை ரகசியமாக நடத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத் துடன் இன்று வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 
temple news
கோவை : தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில், ஸ்ரீ புரந்தர தாசரின் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: கூவம் ஆற்றில் 50 கற்சிலைகளை இளைஞர்கள் கண்டெடுத்து, அதிகாரிகளிடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar