பதிவு செய்த நாள்
16
ஜூலை
2016
12:07
கரூர்: கரூரில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா இன்று நடக்கிறது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில், கரூவூர் சிவனடியார் திருக்கூட்டத்தின், 23ம் ஆண்டு விழா, 62 நாயன்மார்கள், 22ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, காலை, 6 மணி முதல், 12 மணி வரை பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்கள் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு வண்ண விளக்கு அலங்காரத்துடன், 63 நாயன்மார்கள் திருவீதி உலா, நகரின் முக்கிய வீதிகள் வழியாக செல்கிறது. நாளை காலை, 9 மணி முதல், 1 மணி வரை புகழ்சோழர் மண்டபத்தில் ஆண்டு விழாவும், மாலை, 4 மணி முதல், 6 மணி வரை திருமுறை இன்னிசை நடக்கிறது.