தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானை அருணகிரிநாதர் “தீபமங்கள ஜோதீ நமோ நம” என்று திருப்புகழில் பாடுகிறார். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் துõண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும். இதனால் தான் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்துகின்றனர். இதில் பங்கேற்பவர்களும் பார்ப்பவர்களும் நிறைந்த செல்வத்தை அடைவர்.