கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்துவார்கள். அப்போது சொல்வதற்கு இந்த திருவிளக்கு போற்றியை எடுத்துச் செல்லுங்கள்.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றிபோகமும் திருவும் புணர்ப்பாய் போற்றிமுற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றிமூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றிவரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றிஇயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றிஈரேழு உலகமும் ஈன்றாய் போற்றிபிறர்வயமாகாப் பெற்றியாய் போற்றிபேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றிபேரருட் கடலாம் பொருளே போற்றி.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றிமூவுலகும் தொழும் மூத்தோய் போற்றிஅளவிலாச் செல்வம் தருவாய் போற்றிஆனந்த அறிவொளி விளக்கே போற்றிஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றிஇருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றிமங்கள நாயகி மாணி போற்றிவளமை நல்கும் வல்லியே போற்றிஅறம்வளர் நாயகி அம்மே போற்றிமின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி.மின் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றிதையல் நாயகித் தாயே போற்றிதொண்டர் அகத்தமர் துõமணி போற்றிமுச்சுடரின் முதல்வியே போற்றிஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றிசூளாமணி சுடரொளி போற்றிஇருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றிஅருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றிஎளியவனுக்கு அறிவை அருள்வாய் போற்றிஇல்லக விளக்காம் இறைவியே போற்றி.சுடரே விளக்காம் துõயோய் போற்றிஇடரைக் களையும் இயல்பினாய் போற்றிஎரிசுடராய் நின்ற இறைவி போற்றிஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றிஅருமறைப் பொருளாம் ஆதி போற்றிதுõண்டு சுடரனைய ஜோதி போற்றிஜோதியே போற்றிச் சுடரே போற்றிஓதும் உள்ஒளி விளக்கே போற்றிஇருள்கெடுக்கும் இல்லக விளக்கே போற்றிசொல்லக விளக்காம் ஜோதி போற்றி. பலர்காண் பல்லக விளக்கே போற்றிநல்லக நமச்சிவாய விளக்கே போற்றிஉலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றிஉணர்வுசூழ் கடந்தோர் விளக்கே போற்றிஉடம்பெனும் மனையக விளக்கே போற்றிஉள்ளத்தகழி விளக்கே போற்றிமடம்படும் உணர்நெய் விளக்கே போற்றிஉயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றிநோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றிஅளவிலா அளவுமாகும் விளக்கே போற்றிஜோதியாய், உணர்வுமாகும் விளக்கே போற்றிதில்லைப் பொதுநட விளக்கே போற்றிகருணையே உணர்வுமாம் விளக்கே போற்றி கற்பனை கடந்த ஜோதி போற்றிஅற்புதக் கோல விளக்கே போற்றிஅருமறைச் சிரத்து விளக்கே போற்றிசிற்பர வியோம விளக்கே போற்றிபொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி.உள்ளத்திருவனை ஒழிப்பாய் போற்றிகள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றிஉருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றிபெருகு அருள் சுரக்கும் பெருமான் போற்றிஇருள்சேர் இருவினை எறிவாய் போற்றிஅருவே உருவே அருவுருவே போற்றிநந்தா விளக்கே நாயகியே போற்றிசெந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி தீபமங்கள ஜோதீ போற்றிமதிப்பவர் மனமணி விளக்கே போற்றி.பாகம் பிரியா பராபரை போற்றிஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றிஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றிஊழி ஊழி உள்ளோய் போற்றிஆழியான் காணா ஆடியோய் போற்றிஆதியும் அந்தமும் ஆனாய் போற்றிஅந்தமில் இன்பம் அருள்வாய் போற்றிமுந்தை வினை முடிப்பாய் போற்றிபொங்கும் கீர்த்திப் பூரணியே போற்றிதண்ணருள் சுரக்கும் தாயே போற்றி.அருளே உருவாய் அமர்ந்தாய் போற்றிஇருநில மக்கள் இறைவி போற்றி குருவென ஞானம் கொடுப்பாய் போற்றிஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றிதீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றிபக்தியில் ஆழ்ந்த பரமே போற்றிஎத்திக்கும் துதிக்கும் எந்தாய் போற்றிஅஞ்சல் என்றருளும் அன்பே போற்றிதஞ்சம் என்பவரை தாங்குவாய் போற்றிஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி.ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றிஎல்லா உலகமும் ஆனாய் போற்றிபொல்லா வினைகள் அறுப்பாய் போற்றிபுகழ்ச்சேவடி என் மேல் வைத்தாய் போற்றிசெல்வாய செல்வம் தருவாய் போற்றிபூங்கழல் திருவிளக்கே போற்றிஉலகம் உவப்புற வாழ்வருள் போற்றிஉயிர்களின் பசிப்பிணி ஒழிப்பாய் போற்றிசெல்வம் கல்வி சிறப்பருள் போற்றிநல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி.விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றிநலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றிதாயே நின்னருள் தருவாய் போற்றிதுõய நின்திருவடி தொழுதனம் போற்றிபோற்றி என்பார் அமரர் விளக்கே போற்றிபோற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றிபோற்றி என் அன்பு பொலி விளக்கே போற்றிபோற்றி போற்றி திருவிளக்கே போற்றி.