அதிசயம்: கேதார்நாத்லிருந்து.. ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் முக்கிய சிவாலயங்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2016 04:07
இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும். எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள் மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.
தீர்க்கரேகை நிலை: 1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352யி N, 79.0669) 2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067) 3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410) 4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798) 5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455) 6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694) 7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559) 8) ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174).