பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016
12:07
திருவண்ணாமலை: ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன. பின் அதிகாலை, 4.51 மணிக்கு பவுர்ணமி துவங்கியதை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்று, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு, கோவிலில் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் இன்று வரை, ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.