பதிவு செய்த நாள்
21
ஜூலை
2016
12:07
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி விழாவின் இறுதி நாளில், பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில், பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும், மாங்கனி திருவிழா கடந்த 17ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. மறுநாள், புனிதவதியார்– பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது. ஒரு மாதம் தொடர்ந்து நடந்து வந்த மாங்கனி விழாவில், நேற்று முன்தினம் விடையாற்றி உற்சவம் நடந்தது. இதையொட்டி, பஞ்சமூர்த்திகளான பி ச்சாண்டவர், அம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி உற்சவர்களுக்கு விடையாற்றி அபி÷ ஷகம் நடந்தது.முன்னதாக சிறப்பு யாகங்கள் நடந்தது. பின் சந்தனம், மஞ்சள், பால், தேன், பன்னீர், பழரசங்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்து. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.