திருச்செந்தூரில் கடற்கரைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது தூண்டுகை விநாயகர் கோயில். தனது தம்பியான முருகப் பெருமானின் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிப்பதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாம். இவரை முதலில் வணங்கிவிட்டே இளையவரை வணங்குதல் வேண்டும்.