ஸ்ரீ முஷ்ணம் பூவராகவன் சுவாமி திருக்கோயிலில் மூலவருக்கு நாள்தோறும் திருமஞ்சனத்திற்குப் பிறகு முஸ்தாபி சூரணம் என்ற மகாபிரசாதம் வழங்கப்படுகிறது. கோரைக்கிழங்கு மாவு, சர்க்கரை, பசுநெய், பச்சைக் கற்பூரம், ஏலப்பொடி ஆகிய பொருள்களால் செய்யப்படும் இந்தப் பிரசாதம் பல நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.