விழுப்புரம்: விழுப்புரம் வரதராஜ பெருமாளுக்கு, சீதா திருகல்யாண உற்சவம் நடந்தது. விழுப்புரம் மருதுார் ஏழை மாரியம்மன் கோவிலில் உள்ள வரதராஜ பெருமாள் சன்னதியில், சீதா திருகல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 21ம் தேதி முதல் 9 நாட்கள் ராமாயண சொற்பொழிவு நடக்கிறது. இதையொட்டி, கடந்த 22ம் தேதி, வரதராஜபெருமாளுக்கு சீதா கல்யாணம் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.