திருநள்ளார் கோவிலில் தீபம் ஏற்றும் பகுதி சீரமைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2016 11:07
காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவிலில் ரூ.2 லட்சம் மதிப்பில் தீபம் ஏற்றும் இடம் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வசதிக்காக திறக்கப்பட்டது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். சனி பகவானை தரிசனம் செய்து விட்டு, பக்தர்கள் கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக 500க்கு மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் தீபம் வகையில், ரூ.2 லட்சம் மதிப்பில், தீபம் ஏற்றும் இடத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்டது. இப்பணிகள் முடிக்கப்பட்டு தீபம் ஏற்றும் பகுதி திறக்கப்பட்டது. பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், நேரில் சென்று பார்வையிட்டு பக்தர்கள் குறைகளை கேட்டறிந்தனர். இன்ஸ்பெக்டர் பால், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.