மகாவிஷ்ணு, ஒரு சந்தர்ப்பத்தில் தனது சக்ராயுதத்தை, ததீசி என்ற முனிவர் மீது எய்து விட்டார். இதனால் அவரது சக்கரம் பலமிழந்தது. அது மீண்டும் வலிமை பெற சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து அருள் புரிந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் வழியில், 18 கி.மீ., துõரத்தில் இத்தலம் உள்ளது. கோவிந்தனாகிய மகாவிஷ்ணு வழிபட்டதால், இத்தலத்திற்கு கோவிந்தவாடி என்று பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கி இருக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் கைலாசநாதர் லிங்க வடிவில் இருக்கிறார். ஒரே விமானத்தின் கீழ் சிவனும், தட்சிணாமூர்த்தியுமாக அமர்ந்த கோவில் இது. அவரது நெற்றியில் பிறை, கண் இருப்பது சிறப்பு. கங்கை சிரசில் இருக்கிறாள்.