வியாழன் எனப்படும் குரு கிரகம் ஆங்கிலத்தில் ஜூபிடர்’ எனப்படுகிறது. சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களின் வரிசையில் வியாழன் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. நவக்கிரகங்களில் மிகப்பெரிய கிரகமும் இதுதான். பூமியைப் போல 1300 மடங்கு பெரியது என்றால், இதன் அளவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பரப்பளவு கூடுவதால் எடை கூடுவதும் இயற்கையே. ஆம்...இது பூமியை விட 318 மடங்கு எடை கூடுதலானது. பூமி 231/2 டிகிரி அச்சில் (சாய்ந்த நிலையில்) சூரியனைச் சுற்றுவதால், தட்ப வெப்ப நிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், வியாழன் நேரான நிலையில் சூரியனைச் சுற்றுவதால், இங்கு தட்பவெப்பம் மாறாது. வியாழனில் வெளிச்சம் அதிகம். பூமி சூரியஒளியை பிரதிபலிப்பதை விட அதிக பரப்பில் இது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது. மொத்த சூரிய ஒளியில் 51 சதவீதத்தை வியாழன் கிரகமே பெறுகிறது. மீதியைத் தான் மற்ற கிரகங்கள் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், ஒரு அதிசயம். சிறிய பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள 24 மணி நேரமே எடுத்துக் கொள்கிறது. ஆனால், பெரிய வியாழன் தன்னைத்தானே சுற்ற 10 மணி நேரம் தான் ஆகும். பூமியில் இருந்து வியாழன் 63 லட்சம் கி.மீ., துõரத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பு பட்டை பட்டையாகவும், வாயுக்கள் சேர்ந்து கருமேகங்கள் சூழ்ந்துள்ளது போலவும் காட்சி தரும். இதில் ஆக்சிஜன் கிடையாது. ஹைடிரஜன், மெதின், அமோனியா ஆகிய வாயுக்களே உள்ளன. இதன் வெப்பம் எப்போதும் 102 டிகிரி õரன்ஹீட்டாக இருக்கும். ஒளி மிகுந்து இருப்பதால் தங்கம் போல் தகதகக்கும். எனவே தான் கோவில்களில் குருவுக்கு மஞ்சள் ஆடை கட்டுகின்றனர்.